கார்த்தியைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்
வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் எஸ்.ஆர்.பிரபு. ‘மன்னவன் வந்தானடி’ படப்பணிகளை முடித்துவிட்டு, சூர்யா படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் செல்வராகவன்.
இந்நிலையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இது செல்வராகவன் இயக்கவுள்ள படம் தான் எனத் தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.