மருத்துவ பரிசோதனையை தவிர்க்கும் சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதற்கான மருத்துவ பரிசோதனையை தவிர்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

download (18)

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுவிஸ் சுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்று அரசின் அனுமதியுடன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்காக சரியான மருத்துவ பரிசோதனையை மக்கள் மேற்கொள்கின்றனரா என கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆய்வின் முடிவில், போதிய சேமிப்பும், வருமானமும் இல்லாத காரணத்தினாலும், மருத்துவ பரிசோதனைக்கு அதிகளவில் கட்டணம் செலுத்த வேண்டிய காரணத்தினாலும் பலரும் பரிசோதனையை தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது.

அதாவது, 11 நபர்களில் ஒருவர் மருத்துவ பரிசோதனையை தவிர்த்து வருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நடத்தப்பட்டவர்களில் சுமார் 25.5 சதவிகித மக்கள் ‘மருத்துவ கட்டணம் அதிகமாக உள்ளதால் பரிசோதனையை தவிர்த்து விட்டதாக’ தெரிவித்துள்ளனர். இதே எண்ணிக்கை 2010-ம் ஆண்டு 10 சதவிகிதமாக இருந்தது.

அதிகரித்துள்ள மருத்துவ கட்டணங்களுக்கு அதிகளவில் சுவிஸில் உள்ள வெளிநாட்டினர்களும், குறைந்தளவு ஊதியம் பெருபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.