வடமாகாண சுகாதார அமைச்சர்பா. சத்தியலிங்கம் தனது அமைச்சர் பதவியை இன்று (06) ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.
வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் பிரத்தியோக காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
30 வருட ஆயுதப்போராட்டகாலத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக வாழ்ந்தவன் என்பதன் அடிப்படையிலும், மக்களின் துன்பதுயரங்களில் நேரடியாக பங்குகொண்டவன் என்பதன் அடிப்படையிலும் தங்களால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சர் பதவியினூடாக சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் போரால் சின்னாபின்னமாக்கப்ட்ட எமது தேசத்தையும், அதன்பால் துன்பங்களை அனுபவித்த மக்களின் தேவைகளை இனங்கண்டு இருக்கும் வளங்களை பயன்படுத்தி மனச்சாட்சிக்கு விரோதமில்லாது எனது கடமையை திறம்பட செய்து வருகின்றேன்.
நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போலல்லாது வேறுபட்ட தேவைகளை கொண்ட மாகாணமாக உள்ள எமது மாகாணத்தில் வாழுகின்ற மக்களுக்காக அவர்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்ய விசேடமான பல செயற்திட்டங்களை வடிவமைத்துள்ளதுடன் அவற்றினை தங்களினதும், மாகாண அமைச்சர் வாரியத்தினதும் பூரண ஆதரவுடன் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு என்னாலான பணியை செய்தவருகின்றேன்.
எனினும் துரதிஸ்ரவசமாக அமைச்சர்களுக்கெதிராக முறைகேடுகளை விசாரிக்கும் வகையிலான விசாரணைக்குழுவொன்று தங்களால் அமைக்கப்பட்டு அதில் நானும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன்.
இந்த நிலையில் விசாரணைக்குழுவின் இறுதி தீர்ப்பில் நான் குற்றமற்றவன் என்றும் என்னால் நடைமுறைப்படத்தப்படுகின்ற நல்ல செயற்திட்டங்களுக்கு மாகாண நிர்வாகம் பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டுமென்றும் விசாரணைக்குழு பரிந்துரைகளை செய்திருந்த நிலையில் மீண்டும் எனக்கு எதிராக மீள்விசாரணை நடாத்தப்படல் வேண்டுமென்றும் அதற்காக கட்டாய விடுமுறையில் என்னை அனுப்புவதாகவும் முதலமைச்ர் தெரிவித்தீரந்தார்.
அவ்வாறானதொரு விசாரணைக்குழு நீதியானதாகவும், சட்டபூர்வமானதாகவும் இருக்கும் பட்சத்தில் நான் மீண்டும் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவே இருந்தேன். எனினும் கடந்த 05.08.2017 தங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித்தலைவர்களுடனான சந்திப்பில் என்னை அமைச்சர் வாரியத்திலிருந்து வெளியேற்றவேண்டுமென்று முதலமைச்சர் கருத்து தெரிவித்தமையும், அதில் அவர் பிடிவாதமாக இருந்தமையும் அமைச்சர் வாரியத்திலிருந்து என்னை வெளியேற்றுவதில் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடானது அரசியல் உள்நோக்கம் கொண்டதென என்னால் புரியக்கூடியதாக இருந்தது.
இவ்வாறனதொரு சூழ்நிலையில் தொடர்ந்தும் முதலiமைச்சர் தலைமையிலான அமைச்சர் வாரியத்தின் அங்கத்தவனாக இணைந்து கடமையாற்றுவதென்பது சிந்திக்கவேண்டியதாகும்.
இந்த நிலையில் 06.08.2017 யாழ்ப்பாணத்தில் கூடிய இலங்கை தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் தலைமையில் அமைந்துள்ள அமைச்சர் வாரியத்தில் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் எந்தவொரு தமிழரசுக் கட்சிசார்ந்த உறுப்பினரும் அங்கம் வகிக்கப்போவதில்லை என்ற தீர்மானம் தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்திற்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்டையிலும், தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் முன்னால் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு, காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகள், அரசியல் கைதிகள் விடுவிப்பு, புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் இன்னும் பல அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய நாங்கள் மாகாணத்தின் அமைச்சர்வாரிய பிரச்சனைகளை முதன்மைபடுத்த விரும்பாதன்; அடிப்படையிலும் வடக்கு மாகாண அமைச்சர் வாரியத்திலிருந்து விலக திர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.