செஞ்சோலை மழலைகள் படுகொலை; தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி

செஞ்சோலை மழலைகள் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன.

sensolai

இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 3.30 க்கு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாக வீதியில் நினைவு கூறப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று ஸ்ரீலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் உயிரிழந்ததுடன் 129 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையிலேயே சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

குறித்த படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்மசாத்திக்காகவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.