மட்டக்களப்பு தமிழ் இளைஞன் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வு

ட்டக்களப்பைச் சேர்ந்த கமலநாதன் தனுசாந்த் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்பட்ட தேர்வுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சுழல் பந்து வீச்சாளர் தகுதி பெற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1-21

இந்த நிலையில் தனுசாந்திற்கு 2 – 3 மாதங்கள் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்டு தேசிய அணியில் இணைத்து விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவாகியுள்ள இரு தமிழ் வீரர்களில் தனுசாந்தும் ஒருவராக உள்ளார். இவர் படுவான்கரை – கொக்கடிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்வி கற்று வருகிறார்.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கை தேசிய அணியில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.