இலங்கை இளைஞனின் 10 பேர் செய்யும் வேலையை இனி இருவரே செய்யலாம்!

நாவுல, அளுகொல்ல பிரதேசத்தில் வேர்க்கடலை அறுவடை செய்வதற்காக புதிய இயந்திரம் ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

kkkk

28 வயதான கே.ஜீ.சந்திகஜயந்த சேனாதீர என்ற இளைஞரே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

பயன்படுத்தப்படாத நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இந்த இயந்திரத்தை அவர் தயாரித்துள்ளார்.

பயன்படுத்த முடியாத பல பொருட்களை கொண்டு புதிய விடயங்களை உருவாக்குவதில் இந்த இளைஞர் திறமையான ஒருவராவார்.

இந்த இளைஞனின் பல நாள் முயற்சியின் பலனாக இந்த இயந்திரம் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மிகவும் இலகுவாக இலகுவாக வேர்க்கடலை அறுவடை செய்ய முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு ஏக்கர் வேர்க்கடலை அறுவடை செய்வதற்கு 10 பேர் தேவைப்படுகின்றனர். இது குறித்து சிந்தித்த பின்னரே இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயந்திரத்தின் ஊடாக சுத்தமான வேர்க்கடலைகளை பெற்றுக் கொள்ளலாம். மணல் அகற்றுவதற்கும் அந்த இயந்திரத்தினால் முடியும். இந்த இயந்திரத்தில் இரண்டு பேர் வேலை செய்ய முடியும். உதவிகள் கிடைத்தால் இது போல் பல இயந்திரங்களை உருவாக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்..