‘துப்பறிவாளன்’ கதைக்களம் என்ன? – இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார்.

C2GH6JoXcAEkpcQ_13057

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பறிவாளன்’. விஷால் தயாரித்து வரும் இப்படம் செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளைத் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் கதைக்களம் குறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது:

துப்பறியும் நிபுணரான விஷாலுக்கு ஒரு வழக்கு வருகிறது. அதை அவர் துப்பறியும் போது ஏற்படும் சிக்கல்கள், கேள்விகள்தான் திரைக்கதை. அனைத்தையும் தீர்த்து வைக்க, விடைகள் தேடும் போது எதிர்பாராத திருப்பங்கள் என பரபரப்பான த்ரில்லர் பாணியில் இதனை இயக்கியுள்ளேன்.

மேலும், பணத்துக்காக மக்கள் என்ன கொடூரமான காரியங்கள் செய்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். வெறும் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிற படமாக மட்டும் இருக்காது. இதில் சண்டைக்காட்சிகள், எமோஷன் காட்சிகள், மனிதநேயக் காட்சிகள் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தான் இப்படம் இருக்கும்.

இவ்வாறு இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.