பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி போதைப்பொருள் சுற்றி வளைப்புக்கு சென்ற பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அலுவலர்கள் மீது பிலியந்தலையில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் தனது தந்தையாரின் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த 11 வயதுடைய சமாதி ரன்சிகா எனும் சிறுமி உயிரிழந்தார்.
அத்துடன், இந்த சம்பவத்தில் அவரது மூத்த சகோதரரான 17 வயதுடைய சதீப ருக்ஷான் மற்றும் தங்கை செனூரி பத்திரன (08 வயது) ஆகிய இருவரும் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களை ஜனாதிபதி இன்றைய தினம் சந்தித்து, அவர்களது நலன்களை விசாரித்ததுடன், சம்பவம் தொடர்பில் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்த பிள்ளைகளின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த குடும்பத்தின் எதிர்காலத்துக்காக நிதி வழங்கி வைத்தார்.