யாழ் போதனாவைத்தியசாலையில் சினிமா பாணியில் படப்பிடிப்பு !

யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவிற்குள் புகுந்து விழையாடிய கமராக்களினால் சுமார் 4 மணித்தியாலங்கள் அமைதியின்மை நிலவியதாக தெரியவருகின்றது. நேற்று இரவு 6.30 ;மணியில் இருந்து சுமார் 11 மணிவரை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

h1

யாழ் போதனாவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவிற்குள் தென் இந்திய திரைப்பட குழுவினருடன் இணைந்து இலங்கையின் கலைஞர்களும் அனல் எனும் திரைப்பட காட்சிகளை எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். இதேவேளை, பருத்தித்துறையில் இருந்து நோயாளர் ஒருவர் பீடைநாசினியை குடித்த நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

h2

அவரிற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளபட்டிருந்த நிலையில் அவரின் உறவினரான ஒருவர் இவர்களின் செயற்பாட்டை அவதானித்துள்ளார்.தன்னை உள்ளே அனுமதிக்கவிடாது உள்ளே படம் எடுக்கிறீர்களோ என அவர் பதட்டமடைந்த நிலையில் ஏனைய நோயாளிகளின் உறவினர்களும் இதனை அவதானித்து சலசலப்பில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.