அழகின் பெயரால் அரங்கேற்றப்படும் அபத்தங்கள்!

அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் கண்டதையும் அழகுடன் தொடர்பு படுத்தி தேவையற்ற பழக்கங்களாக தொடருகிறோம்

beauty

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மிடம் சொல்லும் தகவல் உண்மையா பொய்யா என்றே தெரியாமல் பலவற்றை நாம் தொடர்ந்து பின்ப்பற்றி கால விரையம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அழகு என்ற பெயரில் மேற்கொள்ளும் சில அபத்தமான விஷயங்கள்.

சேவிங்! : அடிக்கடி முடிவெட்டினாலோ அல்லது ஷேவிங் செய்து வந்தால் வளரும் முடி அடர்த்தியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. ஷேவிங் செய்வதால் வளரும் முடி நீங்குமே தவிர அடர்த்தியாகவோ அல்லது உறுதியாகவோ வளராது.

மஸ்கரா : மஸ்கராவை நீண்ட நேரம் திறந்து வைத்திருக்க கூடாது. இதனால் மஸ்கரா பிரஷ்ஷில் பாக்ரீயா தொற்று பரவ வாய்ப்புண்டு. அதோடு மஸ்கரா சீக்கிரமாக காய்ந்துவிடும். பிரஷ்ஷில் வரவில்லையென்றால் அதனை குலுக்கி பயன்படுத்தப்படுகிறது இது முற்றிலும் தவறான போக்கு.

சம்மர் ஹேர் : சூடான நீரில் தலைக்குளிப்பது, ஹாட் ட்ரையர் உபயோகிப்பது என எல்லாமே சூடாக இருந்தால் வெயிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவும் தவறானது. வெளியில் செல்வதற்கு முன்னால் மாய்சரைசர் க்ரீம் போட்டுக் கொள்வது போல தலைமுடியை பாதுகாக்க ஹீட் ப்ரொடெக்டண்ட் ஸ்ப்ரே அடித்துக் கொள்ள வேண்டும்.

நகம் : நகங்களில் கறை படிந்தால் அவ்வளவு சீக்கிரமாக போகாது. இல்லை, நாம் போக்கிட முடியும். பேஸ் கோட்டிங் ஏதாவது ஒரு நிற நெயில் பாலிஷ் கொடுத்திடுங்கள். அதன் மேலே யுவிபி ப்ரொடக்‌ஷன் நெயில் பாலிஷ் அப்ளை செய்திடுங்கள். இவை சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் தாக்காமல் காத்திடும். இவைத் தவிர பேக்கிங் சோடா நீரில் சில நிமிடங்கள் விரல்களை வைத்திருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காம்பாக்ட் : மேக்கப்புக்கு பயன்படுத்தும் ப்ளஷ் அல்லது காம்பாக்ட் பவுடர் போன்றவை ஒரு முறை கீழே விழுந்து நொறுங்கினால் அதனை மீண்டும் பயன்படுத்த முடியாது என்று நினைத்திக்கொண்டிருந்தால் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அதிலிருக்கும் பவுடரில் சிறிதளவு ஆல்கஹால் சேர்த்து திக்காக வரும் வரை கலக்குங்கள் பின்னர் அது காய்ந்ததும் வழக்கமாக பயன்படுத்துவது போலவே பயன்படுத்தலாம்.

தினம் தினம் மேக்கப் : சருமத்தில் தினமும் மேக்கப் போடுவது சருமத்திற்கு நல்லதல்ல. மேக்கப் போடுவதாலேயே உங்கள் சருமம் பாதிப்படைகிறது என்று நம்புவது முட்டாள் தனம். ஒரு நாள் மேக்கப் இல்லாமல் இருப்பது நல்ல ஆரோக்கியமாக தோன்றினாலும் உங்கள் சருமத்தை சீக்கிரமே பாதிக்கச் செய்திடும். சருமத்துளைகளில் அழுக்குகளை சேர்த்து பரு வர காரணமாகிடும்.

ஷாம்பு : தொடர்ந்து ஒரே ஷாம்பு பயன்படுத்தினால் தான் முடிக்கு நல்லது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வழக்கத்தை விட உங்கள் முடி வறண்டு போனாலோ அல்லது, அதிகமாக உதிர்ந்தாலோ ஷாம்பு தான் கரணம் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவிலிருந்து, நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய்,ஹேர் ஸ்ப்ரே, சீரம், ஆயில் என பலவும் காரணமாக இருக்கலாம்.

ஸ்ப்லிட் ஹேர் : சில குறிப்பிட்ட வகை எண்ணெய் அல்லது ஷாம்பு ஸ்பிலிட் ஹேருக்கு நிவாரணம் அளிக்கும் என்று சொல்லி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.இவை பிளந்த முடியை ஒரு போது ஒன்று சேர்க்காது. ஸ்ப்லிட் ஹேருக்கு ஒரே தீர்வு முடியை வெட்டுவது தான்.