உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

நாம் வீண் என நினைத்து கிழே ஊற்றும் சாதம் வடித்த தண்ணீர் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. இந்த
சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சீகைக்காய் பவுடரைக் கலந்து தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் முடி அடர்த்தியாக வளரும். முடிக்கு பளபளப்பும் கிடைக்கும்.

முடி வளர்ச்சிக்கு உடலில் தேவையான ஊட்டச்சத்து இருக்க வேண்டியது மிகமிக முக்கியம். சந்தைகளில் கிடைக்கும் பல எண்ணெய்களையும், ஷாம்புகளையும் உபயோகிப்பதை காட்டிலும் சத்தான ஆகாரங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும்.
பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் கறிவேப்பிலை, நெல்லிக்காய், பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.

செம்பருத்திப்பூவின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வர முடி நன்றாக வளரும். ஆலிவ் ஆயிலை முதல் நாள் இரவு சூடாக்கி தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால், முடி பளபளப்பாகவும், நன்றாகவும் வளரும்.

தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும். இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.
தாமரைப்பூ கஷாயத்தை காலை, மாலை குடித்து வர நரை முடி அகன்று முடி கருமையாக வளரும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

வெந்தயத்தை தண்ணீர்விட்டு அரைத்து , அந்த விழுதை தலையில் தேய்த்து, அரைமணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்வதால் முடி கொட்டாது. நன்றாக வளரும்.

பாதாம் எண்ணெயை தினசரி முடியின் வேர்கால்களில் இட்டு நன்றாக மசாஜ் செய்து வர முடி நன்றாக வளரும்.

தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும். முடிக்கு ஷாம்பு உபயோகிப்பதாக இருந்தால், இயற்கை ஷாம்புகளை கொண்டு முடியை அலசுங்கள்.

மலச்சிக்கல் இருந்தால், உடல் சூடு அதிகமாகி, உடலில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.