உலகளாவிய ரீதியில் பிரமிக்க வைக்கும் மிகப்பெரிய ரோஜா செடி ஒன்று அரிசோனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரோஜா செடி அரிசோனாவில் உள்ள டம்ப்ஸ்டோனில் காணப்படுவதுடன், அதற்கு வயது 132 என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செடியின் அடிப்பாகம் 12 அடி அகலம், 9 ஆயிரம் சதுர அடி தூரத்திற்குக் கிளைகளை கொண்டுள்ளது.
கடந்த 1885 ஆம் ஆண்டில் நாட்டப்பட்ட இந்தச் செடி இன்று பூத்து குலுங்குவது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழத்தியுள்ளது.
1884 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி கீயும் அவருடைய மனைவி மேரியும் அமெரிக்கா வந்த நிலையில் அழகான பூக்கள் நிறைந்த தன்னுடைய தோட்டத்தை நினைத்து ஏங்கினார்கள்.
இந்த நிலையில் ஸ்காட்லாந்துக்குக் கடிதம் எழுதினால் மேரி. ஒரு பெட்டி நிறைய செடிகளும் விதைகளும் அரிசோனாவுக்கு வந்து சேர்ந்தன.
அத்துடன், மேரியின் பக்கத்து வீட்டுக்காரர் அமெலியா ஆடம்சனுக்கும் நட்புக்காக ஒரு ரோஜா செடியைப் பரிசாக மேரி வழங்கியுள்ளதுடன், இருவரும் செடிகளை தங்களது தோட்டத்தில் நாட்டியுள்ளனர்.
இதேவேளை,அரிசோனா பாலைவனப் பிரதேசம் காரணமாக அங்கு இவ்வாறான செடிகள் வளர வாய்ப்பில்லை என கருதப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்த ரோஜா செடி செழித்து வளந்து உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய ரோஜா செடி என்ற பெயரை பெற்று அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
கடந்த 1920 ஆம் ஆண்டு அந்த வீட்டிற்கு ஜேம்ஸும் எதெல் மசியாவும் குடி வந்தனர். அப்போதே ரோஜா மிகப் பெரிய செடியாகக் கிளைகள் பரப்பியிருந்தன.
இந்த குடும்பத்தினர் செடி வளர்வதற்கான உலோகக் கம்பிகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். இதற்குப் பிறகு செடி மேலும் பெரிதாக வளர ஆரம்பித்துள்ளது.
1993 ஆம் ஆண்டு ஜான் ஹிக்ஸ், ‘உலகின் மிகப் பெரிய ரோஜா மரம்’ என குறிப்பிட்டு, இதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று குறிப்பிட்டதோடு,1937 ஆம் ஆண்டு ராபர் ரிப்ளே, ரோஜாவைப் பார்ப்பதற்காக சென்று பிரம்மித்துப் போனார்.
அவர் மூலம் ‘உலகின் மிகப் பெரிய ரோஜா செடி’ என்ற கின்னஸ் சாதனையும் இச்செடிக்கு எளிதாகக் கிடைத்து விட்டது.
இதனை தொடர்ந்து இன்றுவரை இந்த சாதனையை வேறு எந்த ரோஜா செடியும் முறியடிக்கவில்லை.ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் வரை ஆறு வாரங்கள் ரோஜாக்கள் பூக்கின்றன என குறிப்பிடப்படுகின்றது.