யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 14ஆம் நாள் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.
இன்றைய 14ஆம் நாள் திருவிழாவின் போது நாகத்தின் மேலேறி நல்லூர் கந்தன் வெளிவீதியுலா வலம் வருகின்றான்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் கந்தனின் திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.