ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை!

இலங்கையின் தெற்கே மாத்தறை மாவட்டம் அகுரெஸ்ஸ பழைய பாலத்தில் இருந்து நில்வள கங்கையில் குதித்து காணாமல் போயிருந்த பாடசாலை மாணவியின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

dead

குறித்த மாணவி குதித்த இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள நீர்ப்பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி மாரம்ப பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் பதினொன்றில் கல்வி கற்று வந்துள்ளார். மேலும் இவ்வருடத்திற்கான சாதாரண தர பரீட்சைக்கு குறித்த மாணவி தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் பிற்பகல் 1.30மணியளவில் நில்வள கங்கையில் குதித்துள்ள நிலையில், தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

உயிரிழந்த மாணவியின் உடலை பார்வையிடுவதற்காக அக்குரெஸ்ஸ பழைய பாலம் அமைந்துள்ள இடத்துக்கு அநேகமான மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.