ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவன்: மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பத்து வயதான ரவிசங்கர் துவாரகன் என்ற மாணவனே இவ்வாறு பாடசாலையில் வைத்து ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கோபமுற்ற மாணவனின் தாயார் குறித்த ஆசிரியரிடம் கேட்டபோது “பொலிஸிடம் முறையிடுங்கள், அல்லது உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது எனக்கு தற்போது நேரமில்லை, என்னை நாளை பாடசாலையில் வந்து சந்தியுங்கள் என தொலைபேசியை துண்டித்துள்ளார்.