ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் முந்தல் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் இரகசியமான முறையில் கசிப்பு தயாரிக்கப்படுவதாக முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்று (வியாழக்கிழமை) குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது, 250 கசிப்பு போத்தல்கள், 16 பரல்கள், 5 எரிவாயு சிலிண்டர்கள், 2 அடுப்புகள், மோட்டார் சைக்கிள் ஒன்று, சீனி 150 கிலோ கிராம், மற்றும் கசிப்பு வடி உபகரணங்கள் 4 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கசிப்பு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதால் எவரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்