பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் குறைந்த பட்சம் 100 அறைகளைக் கொண்ட நவீன நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டை அமைப்பதற்கு இரு முதலீட்டாளர்களுக்கு காணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான காணிகள் இரண்டில் இந்த இரு பிரமாண்டமான ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
எனினும் அதில் ஒரு முதலீட்டாளர் தம்மால் அவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க முடியாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
அதனடிப்படையில் குறித்த காணியில் விமான நிலைய ஹோட்டல் ஒன்றினை நிர்மாணித்து, முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான வேறு முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு விலை மனுக்கோருவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.