யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 15ஆம் நாள் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.
இன்றைய 15ஆம் நாள் திருவிழாவின் போது நல்லூர் முருகன் அடங்காத ஆடுகளின் மேலேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.