கல்வி கற்பதற்கு வயதெல்லை என்பது ஒரு தடையல்ல என்பது உலகறிந்த உண்மை. இதை பறைசாற்றும் வகையில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தில் வாழும் 91 வயது நிரம்பிய கிம்லான் ஜினாகுல் என்ற மூதாட்டி, கடந்த பத்தாண்டுகளாக உழைத்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
தனது சிறு வயதிலிருந்தே பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை கிம்லான் ஜினாகுலுக்கு இருந்துள்ளது.
எனினும் தற்போதுதான் அவரது ஆசை நிறைவேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் எனக் கூறும் அவர் தனது ஆசை நிறைவடைந்தமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.