அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் இருப்பை கூட சரிவர கவனிக்காமல், அநியாயமாக பிஞ்சுகளின் உயிரை பறித்துள்ளது அரசு நிர்வாகம்.
உத்திர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் மருத்துவமனையில் உயரிழந்தன.
கோரக்பூர் அமைந்துள்ள உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திடீரென சுமார் 30 குழந்தைகள் உயரிழந்தன.
இது குறித்து மேற்கொண்டு விசாரணையை மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தியதில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இறப்பிற்கு முக்கிய காரணம், ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு வழிவகுத்தது.
ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம் என்னவென்று பார்த்தால்,
ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை பண பாக்கிகாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.