உலக நாயகன் கமல்ஹாசன் தேசிய விருது பெற்ற “மூன்றாம் பிறை” படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகினுள் தயாரிப்பு நிறுவனமாக நுழைந்த சத்யஜோதி நிறுவனம் அதற்குப் பின்னர் பல வெற்றிப் படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த ”தொடரி” மற்றும் ”சத்ரியன்” ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் அஜித்தின் ”விவேகம்” படத்தின் வியாபாரம் அதை மறக்கடிக்கச் செய்யும் வகையில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
விவேகம் படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடியைத் தாண்டினாலும் இந்தப் படத்தின் தமிழக உரிமை மட்டுமே ரூ.54.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளமை இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது.
அஜித்தின் முந்தைய படங்களான “வீரம்” ரூ.34 கோடிக்கும், ”வேதாளம்” ரூ.42 கோடிக்கும் வியாபாரம் ஆன நிலையில், இந்தப் படம் ரு.54.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளமை அஜித்திற்கு ஒரு சாதனை தான்.
அஜித்தின் அடுத்த படத்தையும் இதே சத்ய ஜோதி நிறுவனம் தான் தயாரிக்கும் என்று செய்திகள் கசிந்துள்ளன.
இந்தச் செய்தி உண்மையானால் அதைவிட வேறு சந்தோஷம் இந்நிறுவனத்திற்கு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.