அடுத்து வரும் மூன்று தசாப்தங்கள் பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து…!

அடுத்து வரும் மூன்று தசாப்தங்களுக்கு பிரித்தானியா பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உளவு பிரிவின் முன்னாள் தலைவர் எச்சரித்துள்ளார்.

7294538516_90eaff45ab_b

பிரித்தானியாவில் 30 வருடங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இருக்கும் என உளவு பிரிவின் இயக்குநராக செயற்பட்ட Jonathan Evans சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு தலைமுறை பிரச்சினை எனவும், இதனை சமாளிக்க பல தசாப்தங்கள் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சக்தி வாய்ந்த விளைவை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த பட்சம் 20 வருடங்கள் நாம் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையில் இருக்கின்றோம் என நான் நினைக்கிறேன். இன்னமும் 20 வருட காலம் இந்த நிலை நீடிக்கும் என்பது எனது கணிப்பு

இது உண்மையிலேயே ஒரு பொதுவான பிரச்சினை என நான் நினைக்கிறேன். நான் 2013ஆம் ஆண்டு உளவு பிரிவில் இருந்து ஓய்வு பெற்றேன். அப்போது அல் கொய்தாவின் பாரிய அச்சுறுத்தலுக்குள் நாம் உள்ளோம் என நான் நினைத்தேன்.

நாங்கள் இன்னும் 20, 30 ஆண்டுகள் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்க நேரிடும் என நான் நினைக்கின்றேன். எனவே நாம் தொடர்ந்து விடாமுயற்சியுடன் கடுமையாக போராட வேண்டும்.

அதேவேளை பிரித்தானியாவில் கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரஷ்யா தலையிடாமை குறித்து மிகவும் ஆச்சரியப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதுடன், சிரியா, ஈராக்கில் செயற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் 400க்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.