யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவரைப் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று முன்தினம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுவிட்டு ஆலயத்தின் பின்பக்கமாகவுள்ள சிவன் ஆலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றுள்ளார்.
குறித்த பெண்ணுடன் அவரது கணவரும் சென்ற நிலையில் கணவர் மனைவிக்குச் சற்றுத் தொலைவில் நின்ற போது குறித்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த ஒருவர் முயன்றுள்ளார்.
எனினும், குறித்த பெண்மணி அந்த அனர்த்த்தில் சிக்காமல் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடமையில் ஈடுபட்டிருந்த யாழ். பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.