தமிழகமே எதிர்நோக்கி இருக்கும் ஆகஸ்ட் 24 இல் நடக்கப்போவது என்ன?? அன்று கிழிய போகும் முகத்திரை யாருடையது??

செப் 22, 2016-இல் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு தஞ்சாவூர்,

jayalaitha-and-suprem-court

அரவக்குறிச்சி உள்ளீட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு அக்டோபரில் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்து,

22 பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைநாட்டு வைத்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக சார்பில் கொடுக்கப்பட்டது.

அந்நேரத்தில் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், இட்லி சாப்பிடுகிறார், டிவி பார்க்கிறார், நடக்கிறார் என்று அப்போலோ மருத்துவ அறிக்கை வந்துக் கொண்டிருந்த நிலையில் எதற்காக ஜெயலலிதாவின் கைரேகை என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன.

அப்போலோவில், “ஜெயலலிதா உயிரோடு தான் இருக்கிறார்” என்று நம்பிக் கொண்டிருந்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களைப் போல்,

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் அதே மனநிலையோடு வேட்பு மனுவை பரிசீலிக்காமல் ஏற்றுக் கொண்டு, நவம்பரில் இடை தேர்தலையும் நடத்தி அதிமுகவும் வெற்றி பெற்றுவிட்டது.

அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று அவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன், “வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை இருப்பதை எப்படி தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது?” என்று அப்போதே வழக்கு தொடர்ந்தார்.

பல குறுக்கு விசாரணைகளுக்கு பிறகு,

வரும் ஆகஸ்ட் 24, 2017 இல் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி 22 பக்க ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

திமுக என்னும் எதிர்கட்சியின் வழக்காக மட்டும் இதை பார்த்துவிட முடியாது.

மார்ச் 2, 2017-இல், அதிமுகவைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன்,

இடைத்தேர்தலுக்காக, தேர்தல் ஆணைய சார்மில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டபோது அங்கு இருந்ததாக கூறப்படும் அரசு மருத்துவர் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்ததையும் நாம் கவனத்தில் கொள்வோம்.

ஜெயலலிதா டிசம்பர் 5,2016-இல் இறந்ததாக அறிவிக்கப்பட்டு 60 நாட்களுக்கு பிறகு, பிப்ரவரி 2017-இல் அப்போலோ மருத்துவர் பாபு ஏப்ரஹாம் (தீவிர சிகிச்சை பிரிவு),

மருத்துவர்.பாலாஜி (அரசு மருத்துவர் ஐவர் குழுவின் தலைவர்) லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவும் பத்திரிகையாளர்களிடம் என்ன கூறினார்கள் என்பதை பார்ப்போம்.

ஜெயலலிதா அப்போலோவிற்கு கொண்டு வரப்பட்டபோது மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் அவருடைய தொண்டையில் துளை ஏற்படுத்தப்பட்டு சுவாசிப்பதற்கான கருவி பொருத்தப்பட்டதாக மருத்துவர்.பாபு ஏப்ரஹாம் பிப்ரவரி 2017 இல் கூறியுள்ளார்.

இவர் முதன்முறையாகவும் கடைசியாகவும் பேட்டியளித்தது ஒரே ஒரு முறைதான்.

ஆனால் அப்போலோ அறிக்கை அன்றைய காலகட்டங்களில் (செப், அக்டோ-2016) லேசான காய்ச்சல், நீர்சத்து குறைபாடு என்று கூறி, இட்லி சாப்பிட்டார், தயிர் சாதம் சாப்பிட்டார் என்கிற கதையெல்லாம் செப்டம்பர், அக்டோபர் தொடக்கத்தில் கூறியது.

அப்போலோ தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர், “ஜெயலலிதா மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டவுடனேயே தொண்டை பகுதியில் துளை போடப்பட்டதாக கூறுகிறார்.

இந்நிலையில் இருந்திருக்கும் போது ஜெயலலிதாவால் எப்படி திட உணவு வகைகளை சாப்பிட முடிந்தது?

அதேப்போல் ஜெயலிலதாவின் பர்சனல் மருத்துவர் மருத்துவர்.கே.எஸ்.சிவக்குமார் அரசு தரப்பு மருத்துவக்குழுவில் அனுமதிக்கப்படாமல் மருத்துவர்.பாலாஜி தலைமையில் ஐவர் குழுவை அமைக்க உத்தரவிட்டவர்கள் யார்?

ஜெயலலிதாவின் படுகொலைக்கு சசிகலா குழு மட்டுமே முழு பொறுப்பு என்றால் சசிகலாவின் அதிகாரத்தில் உள்ளதாக கருதப்பட்ட தமிழக அரசு மற்றும் அப்போலோ ஏன் ஜெயலிலதாவின் பர்சனல் மருத்துவர் மருத்துவர்.கே.எஸ்.சிவக்குமாரை நியமித்துக் கொள்ளவில்லை?

இதில் இருந்தே “சசிகலாவின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் அப்போலோ வாழ்க்கை இல்லை” என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அப்படியானால் அரசு மருத்துவர் மருத்துவர்.பாலாஜியை நியமனம் செய்தது யார்? தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ‘ராஜேஷ் லக்கானி’ எந்த சட்டத்திட்டத்தின் கீழ் கைரேகை மனுவை பெற்றுக் கொண்டார்?

ஆகஸ்ட் 24 வரை பொறுத்திருப்போம்.

‘ராஜேஷ் லக்கானி’ வாதங்களிலும் முரண்பாடுகள் தெறிக்கும். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விவாதங்களை மீண்டும் ஓபிஎஸ் / எடப்பாடி அணிகள் தொடராது.

இனி 4 வருடங்களுக்கு இரு அணிகளுமே இது குறித்து பேசப் போவதில்லை. ஆனால் சசிகலா அணி ஆட்சி அதிகாரம் பறிபோன கோபத்தில் மீண்டும் ஜெ மரணம் விவாதிக்கப்படலாம்.