கழகம் உடைந்து கிடக்கும் போது, அதற்குள் கலக்கம் வந்து விடும் நிலையில் போய் கொண்டிருக்கிறது.
இதனால் அதிமுக பொதுசெயலாளர் என்று நாம் எதற்கு இருக்கிறோம் என்று சிறையில் இருந்து ஒரு கடுதாசியை தட்டிவிட்டிருக்கிறார் சசிகலா.
அதிமுகவின் எஃகு கோட்டையில் விரிசல் விழுந்துள்ளதால், தன் கடிதம் வெல்டு வைக்கவாவது செய்யும் என்பது தான் சசிகலா கணக்கு.
தனக்கு இன்னும் அதிகாரம் இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள இந்த கடித முயற்சியை விட்டால் வேறு வழியில்லை.
தற்போது வந்துள்ள கடிதத்தில்,
‘வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர்.
இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது.
முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம்.
ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதில் கடைசி வரி தான் இரு அணி தலைவர்களையும் கிறங்கடிக்க செய்துள்ளது.
ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் என்று கூறி இருப்பதால்,
அதிமுகாவின் தலைமை பொறுப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அமைச்சரவை மாற்றம் நிகழ்த்தலாம் என்பது திட்டமாக தெரிகிறது.
இனி அம்மா கவனித்த பொறுப்புகளை எல்லாம் தனது துருப்புகளை வைத்து மறைமுகமாக செய்ய திட்டமிட்டுள்ளார் சசிகலா.