கடந்த 2015-ம் ஆண்டு ஒரு விசாரணைக்காக அந்த இஸ்லாமிய பெண்ணை போலீசார் ஆங் பீச் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, அவர் அணிந்திருந்த பர்தாவை நீக்குமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர். யாரும் மில்லாத இடத்தில் பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் தான் தனது பர்தாவை நீக்க வேண்டும்’ என அப்பெண் முறையிட்டுள்ளார்.
ஆனால், பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த ஒரு ஆண் போலீஸ் அதிகாரி அவருடைய பர்தாவை கட்டாயப்படுத்தி நீக்கியுள்ளார்.
பிறபோலீஸ் அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் முன்னிலையில் தனது பர்தா நீக்கப்பட்டதால் அவர் மிகவும் வருந்தியுள்ளார்.
மேலும், இரவு முழுவதும் அவர் பர்தா இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் விசாரணை முடிந்ததும் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், காவல் நிலையத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை கண்டித்து அவர் வழக்கு பதிவு செய்தார்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரு. 54 லட்ச ரூபாய் 85,000 டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் தனியான ஒரு இடத்தில் பெண் போலீஸ் அதிகாரி மட்டுமே இஸ்லாமிய பெண்களின் பர்தாவை நீக்க வேண்டும்’ எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.