வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

பத்தேகம – கொடவத்த தெற்கு பிரதேசத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

gun-2227646_1920

பத்தேகம நீதவான் நீதிமன்றின் பின்புறத்தில் உள்ள வீட்டிலே இந்ததுப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டினை மேற்கொள்வதற்கு வந்துள்ள நபர் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று, வீட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த நபரை சுட்டு விட்டு, தப்பிச் செல்வதற்கு முயன்றுள்ளார்.

இதன்போது, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் மற்றும் அவரது மனைவி, துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபருடன் சண்டையிட்டுள்ளனர்.

இதனையடுத்து, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபரின் மனைவி குறித்த நபர் மீது, பொருள் ஒன்றினால் தாக்கியுள்ளார்.

இதனால் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். எனினும் காயமடைந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் முன்னர் கடற்படையில் பணி புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் முச்சக்கர வண்டி சாரதியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய குறித்த நபர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் கைபேசி மற்றும் துப்பாக்கியினை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.