இலங்கையில் விரைவில் மின்சார ரயில் சேவையினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை, பொல்கஹவலை, கோட்டை, நீர்கொழும்பு, களனிவெளி பகுதிகளில் 158 கிலோ மீற்றர்களை கொண்ட புகையிரதப் பாதைகளில் இந்த மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஸ்பெயின், சீனா ஆகிய ஆறு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த திட்டத்திற்காக 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.