பாவங்களில் இருந்து விடுபட என்னிடம் வாருங்கள் – அழைக்கும் மகிந்த ராஜபக்ச

தாம் செய்த பாவங்களில் இருந்து விடுபட உடனடியாக பதவியை கைவிட்டு கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Mahinda-Rajapaksa-on-the-way-to-Palestine

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் தந்தையாரது நினைவு தின புண்ணிய தான நிகழ்வில் பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாடு தற்போது பெரும் பாதாளத்திற்குள் விழுந்துள்ளது. அனுராதபுரம் மக்கள் தாமரைக் கிழங்குகளை உணவுக்காக பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல தொந்தரவுகள் நடக்கின்றன. இந்த நிலைமைக்கு நாட்டை தள்ளி பாவத்தில் இருந்து விடுபடுங்கள்.

அமைச்சர்கள் மோதிக்கொள்கின்றனர். நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வரப்படுகின்றன. என்னை திருடன் என்றவர்கள் தற்போது அவன் திருடன், இவன் திருடன் என்று கூறிக்கொள்கின்றனர்.

பார்க்கும் எல்லோருமே திருடர்கள் என்று அவர்களே கூறிக்கொள்கின்றனர். நாட்டின் வளங்களை விற்பனை செய்கின்றனர். பெறுமதியற்றது என்றால் ஏன் விற்கின்றனர். விற்பனை செய்யும் போது தரகு பணம் செல்லும் விதத்தை கண்டறிய வேண்டும்.

கடன் காரணமாக மக்கள் மீது சுமையை ஏற்றவில்லை. பிணைமுறி மோசடியை மறைக்கவே இதனை செய்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.