யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 17ஆம் நாள் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.
இன்றைய 17ஆம் நாள் திருவிழாவின் போது நல்லூர் முருகன் “இடும்பாயுதனாம் இடும்பன்” மீது வலம் வருகின்றான்.
முருகனுக்கு காவடி எடுக்கும் முறை தோன்றியதற்கு இடும்பனே காரணமாவார். கந்தசஷ்டி கவசத்திலும் “இடும்பாயுதனே இடும்பா போற்றி” என்ற வரி உண்டு