நம்பி வந்த 63 பிஞ்சுக் குழந்தைகளுக்கான பதில் என்ன ?

உபிக்கு மட்டுமல்ல, பீகார், ஏன் நேபாள நாட்டு மக்களும் தங்கள் குழந்தைக்கு கடைசி புகலிடமாக கருதும் கோவிலுக்கு நிகரானது கோரக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.

63

சுமார் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளைக்கான 63 லட்ச ரூபாய் நிலுவையை கேட்டு கேட்டு பார்த்து சலித்துப்போய் கடைசியில் சப்ளையை நிறுத்திவிட்டது தனியார் நிறுவனம்.

பணத்திற்கு ஏற்பாடு செய்தால்தான் ஆக்சிஜன் கிடைக்கும். இல்லாவிட்டால் பல உயிர்கள் பலியாகுமே என்று அரசாங்க பைலை பார்க்கவேண்டிய எவருக்கும் புத்தியில் தோன்றவில்லை.

கடந்த ஏழாம் தேதி முதல் அடுத்தடுத்து சிசுக்கள் மருத்துவனையில் பலியாகின்றன. ஒன்பதாம் தேதி முதல் அமைச்சர் யோகியே நேரில் வருகிறார்..சில ஏற்பாடுகள் நடக்கின்றன.

அதன்பிறகும் ஆக்சிஜன் சப்ளை போதாது என்று ஊழியர்கள் அலெர்ட் செய்கின்றனர்.. நோ. ஆக்சன். முதல்வர் வந்துபோன பிறகு 33 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன.

எதோ ஒரு மருந்து சோதிக்கப்பட்டு இருக்கிறது அல்லது நரபலி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கம்பெனிக்காரனுக்கு காசு கொடுக்கல அதான் ஆக்சிஜன் கட் என்பதெல்லாம் ஊரை ஏமாத்துற வேலை.

ஒரு அரசாங்கத்தை எதிர்த்து சும்மா ஆக்சிஜன் கட் பண்ண மாட்டான் எவனும். ஹாஸ்பிட்டல்ல ஜோசியக்காரனை வைக்க சொன்ன குரூப் இவங்க.

ஆனால் முதலமைச்சர் யோகியோ பல்வேறு காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்ததாக நேற்று செய்தியாளர்களிடம் சொல்கிறார். ஒன்றிரண்டுதான் அப்படி இருக்க வாய்ப்பு

குழந்தைகள் சாவுக்கு யார் பொறுப்பு என்ற ஆளாளுக்கு பழிபோடும் படலம் ஆரம்பம் ஆயிடிச்சி.. மருத்துவமனை முதல்வரை சஸ்பெண்ட் என்றார்கள்.

அவரே நீ என்னடா சஸ்பெண்ட் பண்றது..நானே ரிசைன் பண்றேன்னு போயிட்டாரு..

முதல்வர் கவனத்துக்கு போனபிறகும் இறப்பு தொடர்கிறதென்றால் முதல்வர்தான் பொறுப்பு. நம்பி வந்த 63 பிஞ்சுக் குழந்தைகளை அவர் அரசால் காப்பாற்ற முடியவில்லை.