இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமை தொடர்பில், தமிழ் பெண்ணொருவரினால் அயர்லாந்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கியமை தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் RUC படைக்கு எதிராக அயர்லாந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் விதவைப் பெண் ஒருவரினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
1986 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு விசேட அதிரடிப் படையினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய RUC படையினரால் இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமையினால் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.