ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் தனித்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலமாக மஹிந்த அணியினருடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அதிருப்தி அடைந்துள்ளது.
இதன்கீழ் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருடன் இணை அரசாங்கத்தில் இருந்தால் தாம் பதவி விலகப் போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.