சிராந்தி, யோசிதவுக்கு சிக்கல்! விசாரணைக்கு மீளவும் அழைப்பு!

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பான விசாரணைகளில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச, அவரது மகன் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு மீளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

shiranthi1

வாக்கு மூலமொன்றை வழங்குமாறு ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவிப்புக்களுக்கு யோசிதவும், சிராந்தியும் சாதகமான பதிலை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாஜூடின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவிப்பின் போது திடீர் சுகயீனம் காரணமாக முன்னிலையாக முடியாது எனவும், வேறும் திகதிகளை வழங்குமாறும் யோசிதவும் சிராந்தியும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிராந்தி ராஜபக்ச இன்றும், யோசித ராஜபக்ச நாளையும் விசாரணைகளில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு வசிம் தாஜூடின் நாரஹென்பிட்டி பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.