சீ.ஐ.டியில் முன்னிலையாகாத ஷிராந்தி மற்றும் யோசித! மீண்டும் திகதிகளில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் மகன் யோசித ராஜபக்ச ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவதற்கான திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

download (2) (1)

இதன்படி, குறித்த இருவரும் நாளையும், நாளை மறுதினமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள ஷிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரை இன்றும், நாளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய தினமும் முன்னிலையாக முடியாத காரணத்தினால் நாளையும், நாளை மறுதினமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாஜூடின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவிப்பின் போது திடீர் சுகயீனம் காரணமாக முன்னிலையாக முடியாது எனவும், வேறு திகதிகளை வழங்குமாறும் யோசிதவும், ஷிராந்தியும் கோரியிருந்தனர்.

இதன்படி, இன்றைய தினம் ஷிராந்தி ராஜபக்சவையும், நாளைய தினம் யோசித ராஜபக்சவையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீணடும் விசாரணை திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 2007ம் ஆண்டு வசிம் தாஜூடின் நாரஹென்பிட்டி பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.