மதுபான நிலையத்தில் பணியாற்றுபவரின் சடலம் மீட்ப்பு

வவுனியாவில் குடும்பஸ்தரொருவரின் சடலம் கோவில்குளம் பகுதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ma

குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில்,

வவுனியா, கோவில்குளம் பகுதியிலுள்ள மதுபான நிலையத்தில் பணியாற்றும், கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அலேசு அருளப்பு எனும் 58 வயதான குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மதுபான நிலையத்தில் பணிகளை நிறைவு செய்த பின்னர் கதிரையில் அமர்ந்துள்ளார். இந்த நிலையிலேயே சடலம் மீட்கப்படுள்ளது என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)