இணையத்தளம் வழியாக பெண்களை ஏமாற்றிய நபர் கைது

இணையத்தளம் ஊடாக பெண்களுடன் நட்பாகி அவர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் அவிசாவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

images (18)

சந்தேக நபர், இணையத்தளம் பெண்களுடன் தொடர்புக்கொண்டு அவர்களை திருமணம் செய்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்களை நேரடியாக சந்திக்க வரும் சந்தேக நபர், அந்த பெண்களிடம் இருக்கும் தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளார்.

சந்தேக நபர், பாதுக்க, களுத்துறை, வடக்கு, தெஹிவளை போன்ற பிரதேசங்களில் நடந்த பண கொள்ளை மற்றும் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

மிரிஹான விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ள இந்த சந்தேக நபர் நிவித்திகல, வடாபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.