பிறந்தவுடன் புதைக்கப்பட்ட பச்சிளம் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

லிந்துலை – மட்டுக்கலை 7ஆம் இலக்க கொலணி பிரிவில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலமொன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் தயா நாணயக்கார முன்னிலையில் லிந்துலை பொலிஸார், பொது மக்கள் உதவி கொண்டு மதியம் 2 மணியளவில் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மட்டுக்கலை 7ஆம் இலக்க கொலனி பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் சிசு ஒன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணுக்கு அதிக குருதிப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அவர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இதன்பின் அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

p1

அங்கு இந்த பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள் சிசுவை பிரசவித்ததால் அவருக்கு குருதி போக்கு ஏற்பட்டு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

பிரசவிக்கப்பட்ட சிசு தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போது, சிசுவொன்று தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து வைத்தியர்கள் நுவரெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

p2

 

இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையில், சிசுவை பெற்றெடுத்த தாய் மற்றும் சிசுவை தோட்டத்தில் புதைக்க உதவி புரிந்த பெண் ஆகியோரையே லிந்துலை பொலிஸாரின் ஊடாக கைது செய்தனர்.

சம்பவத்தில் சிசுவை புதைத்த இடத்திலிருந்து மீட்பதற்கு லிந்துலை மற்றும் நுவரெலியா பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை நேற்று பெற்றிருந்தனர்.

இதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் தயா நாணயக்கார தலைமையில் சிசு புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

p3

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் சடலத்தை நீதிமன்ற அனுமதியுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லிந்துலை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

p4