லண்டனின் “பிக்பென்” கடிகாரம் நான்கு ஆண்டுகளுக்கு ஒலிக்காது ….?

லண்டன் நகரின் அடையாளமாக இருக்கும் “பிக்பென்” கடிகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நான்கு ஆண்டுகளுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

images (21)

திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு “பிக்பென்” கடிகாரம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 2021ஆம் ஆண்டு வரையில் குறித்த கடிகாரம் ஒலிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது கடிகாரம் ஒலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1856ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வரும் “பிக்பென்” கடிகாரம் 800 கோடி ரூபா செலவில் திருத்தியமைக்கப்படவுள்ளது. ஆரம்பத்தில் என்ன வண்ணம் பூசப்பட்டதோ, அதே வண்ணம் மீண்டும் பூசப்படவுள்ளது.