இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸே்வரனிடம் குற்ற விசாரணை திணைக்களம் நேற்றைய தினம் மீண்டும் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயகலாவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்ட சுவிஸ் குமார் எனப்படும் பிரதான சந்தேக நபர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தார்.
அது பொருத்தமற்ற செயற்பாடு எனவும், சந்தேகநபர் என்றாலும் அவருக்கு எதிராக சட்டரீதியாகவே செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் விஜயகலாவிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது, வித்தியா கொலை தொடர்பில் அவருக்கு தொடர்பில்லை என குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.