இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றி கண்டியில் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.
இந்தியாவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு இலங்கையிலுள்ள இந்திய வீரர்கள் தமது நாட்டின் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
இந்த செய்தியை பிசிசிஐ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
5 ஒரு நாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணியினர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இவர்கள் தற்போது கண்டியில் தங்கியுள்ளனர். இதன்போது, கோலி இந்திய நாட்டின் தேசியக் கொடி ஏற்ற, பின்னர் அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர்.