அதிகளவு நேரம் கைபேசியில் பேஸ்புக் பாவிப்பது தொடர்பில் மகளினை தந்தை கண்டித்ததினால் மகள்(சிறுமி) தவறான முடிவெடுத்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் (12) காலை 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15வயதுடைய சிறுமியே இவ்வாறு தவறான முடிவெடுத்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தந்தை கண்டித்ததினால் தூக்கு போட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.