மூன்று மணித்தியாலயங்கள் சிராந்தியிடம் துருவி துருவி விசாரணை

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையாகி இருந்தார்.

shiranthi

இன்று காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை விசாரணை நடைபெற்றுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலயம் நடைபெற்ற இந்த விசாரணையின் போது வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான பல்வேறு கேள்விகள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடுக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் பதில் அளித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.