வினாத்தாள்களைக் கொண்டு சென்ற வாகனத்துக்கு நேர்ந்த விபத்து !

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்களைக் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது.

vv

பதுளை உயர் தொழில்நுட்ப நிறுவனம் நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும் உயர் கல்வி அமைச்சிற்கு சொந்தமான இந்த வாகனம், பதுளை – பண்டாரவெல வீதியின் உடுவர 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் வீதிய விட்டு விலகி மதில் சுவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். அவர் உறங்கு நிலைக்குச் சென்றமையே இந்த விபத்துக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

இருப்பினும் வினாத் தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கல்விசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.