வவுனியாவில் தனியார் வைத்தியசாலை சுற்றிவளைப்பு: மருந்துகள் பறிமுதல்

 

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைக்கப்பட்டது.

ho

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினரே மேற்படி வைத்தியசாலையைச் சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில் சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துப்பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பு குறித்து கருத்து தெரிவித்த வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் “குறித்த வைத்தியசாலையானது எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை அடுத்து இந்த மருந்து வகைகள் எவ்வாறானவை என்றும் தெரியவில்லை.

இதன் காரணமாக மருந்துகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் மருந்துகள் பரிசோதனைக்காகவும் அனுப்பிவைக்கப்படவுள்ளது என குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ் குறிப்பிடுகையில், “எனது வைத்தியசாலை கோமியோபதி வைத்திய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியில் வைத்தியசாலையின் பெயர் இருக்கின்றது.

கிளிநொச்சி மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் எமது கோமியோபதி வைத்தியசாலை இயங்கி வருகின்றது. எனினும் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க தயாராக இருக்கின்றோம்” எனவும் தெரிவித்தார்.

ho1 ho2 ho3