விஐபி 2 படத்தின் மூன்று நாள் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா..!

தனுஷ், அமலாபால், கஜோல் ஆகியோரது நடிப்பில், செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய “விஐபி 2” திரைப்படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்று வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

VIP-2-380

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்று நாள் தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் “விஐபி 2” திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் ரூ.1.53 கோடி, செங்கல்பட்டு பகுதியில் ரூ.3.5 கோடி, கோவையில் ரூ.1.8 கோடி மற்றும் நெல்லை-குமரி பகுதியில் 53 லட்சம் என வசூல் செய்துள்ளது.

இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் இந்த படத்தின் ஐந்து நாள் தமிழக வசூல் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக விநியோகிஸ்தர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில், ”சிங்கம் 2”, ”காஞ்சனா” வரிசையில் இரண்டாவது பாக வெற்றி படங்களின் பட்டியலில் ”விஐபி 2” படமும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.