இந்தியாவின் 71 ஆவது சுதந்திர தின விழாக்கள் நாடு முழுவதும் விமர்சையாகியுள்ள நிலையில் எல்லையில் உள்ள இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இனிப்புகள் வழங்கி வைத்துள்ளனர்.
பஞ்சாப் – அட்டாரியில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லைக் கதவுகள் திறக்கப்பட்டு எல்லை பாதுகாப்பில் உள்ள பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு இந்தியப் படையின் கமாண்டர் சுதீப் குமார் இனிப்புகள் வழங்கியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை காரணமாக எல்லையில் அன்றாடம் மோதிக் கொள்ளும் இரு நாட்டு இராணுவத் தரப்புகளும் சுதந்திர தினம் காரணமாக இனிப்புகள் பரிமாறிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை நேற்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு அந்நாட்டு படையினர் இந்திய இராணுவத்தினருக்கு இனிப்புகள் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.
குறித்த சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே இடம் பெறும் பதற்ற சூழலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பனவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.