சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை – இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

taranjit-

இந்தியாவின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது.  சிறிலங்காவின் ஒற்றுமை, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது.

பல மொழி, பல்லின, பல சமூகங்களை் வாழும் சிறிலங்காவில், அனைத்து மக்களும், சமத்துவம், பாதுகாப்பு, நல்லிணக்கத்துடன், வாழ்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது.

சிறிலங்காவுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா ஈடுபடும்.

உட்கட்டமைப்பு, உற்பத்தி, சுகாதாரம், கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளும் முதலீடுகளுக்கும் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இந்தியாவின் பெறுமதிமிக்க பங்காளர்களில் சிறிலங்காவும் ஒன்று.

கடல்வழிப்பாதையின் பாதுகாப்பு  உள்ளிட்ட பொதுவான பாதுகாப்புக் கரிசனைகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பு பேணப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார்.