இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பிங்கர்-4 மற்றும் பிங்கர்-5 எல்லையில் சீன வீரர்கள் ரகசியமாக ஊடுருவ முயன்றனர்.
அவர்களை இந்திய வீரர்கள் மனிதச் சங்கிலி போன்று வேலி அமைத்து தடுத்து தங்களது பலத்தை காட்டியுள்ளனர்
சீன வீரர்களின் இந்த முயற்சியையும் இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். இதனால் காண்டான சீன வீரர்கள் இந்தியப் பகுதியில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வீரர்களும் கல்வீசித் தாக்கினர். இதில் இரு தரப்பிலும் வீரர்களுக்கு கல்லடி காயங்கள் ஏற்பட்டன.இதுதொடர்பாக இந்திய ராணுவத்தினர் தகவல் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இந்தியா – பூடான் – சீனா எல்லையான டோக்லாம் பகுதியில் சீன வீரர்களின் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் கோவமடைந்த சீன வீரர்கள் இந்தியாவின் பதுங்கு குழிகளை அழித்தனர்.
இதையடுத்து டோக்லாம் பகுதியில் இந்திய வீரர்கள் எக்கசக்கமாக குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்தும், இந்திய வீரர்கள் அகற்றப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது
பதிலுக்கு சீன வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டதால் பதற்றம் கூடியது..இருநாடுகளுக்கு இடையே எந்நேரமும் போர் வெடிக்கும் என கூறபடுகிறது