பாணந்துறை – பிங்ஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு காவற்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 200 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 16 கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மற்றும் 25 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடாசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை பதிவேற்றி கொடுப்பதற்காக இந்த தொலைபேசிகளை வைத்திருந்திருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.
இந்த கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் பாடசாலை மாணவர்களுடையதாக இருக்கலாம் எனவும் காவற்துறை சந்தேகிக்கிறது.
மேலும் அந்த கையடக்க தொலைபேசிகளில் ஆபாச காணொளிகள் இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசிகளை பாடசாலை மாணவர்களிடமிருந்து பெற்று கொண்டு, அவற்றில் ஆபாச காணொளிகளை பதிவேற்றி பணம் பெற்றுகொள்ளும் மோசடி இடம்பெற்றுள்ளதா என காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.